DIG டி.சி.ஈ.தனபாலவுக்கு பதவி உயர்வு

பிரதிப் பொலிஸ் மா அதிபர் டி.சி.ஈ. தனபால சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியின் பிரகாரம், பொலிஸ் விசேட பணியகத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டி.சி.ஈ. தனபால சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனால் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த பெப்ரவரி 29ம் திகதி முதல் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement