9 மாதங்களின் பின்னர் 300 ரூபாவை விட குறைந்த டொலர்!

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்ட நாணய மாற்று விகிதத்தின் படி அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுப்பெற்றுள்ளது.

இதனடிப்படையில், அமெரிக்க டொலரின் விற்பனை விலை 308.90 ரூபாவாகவும், கொள்வனவு விலை 299.29 ரூபாவாகவும் மற்றும் குறியீட்டு விலை 304.63 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 05 ஆம் திகதிக்கு பின்னர் அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 300 ரூபாவை விட குறைந்துள்ளமை இதுவே முதன்முறை என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Advertisement