8 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது

மொனராகலை பிரதேசத்தில் 08 கிலோ உலர் கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நச்சு போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கஞ்சா கையிருப்பு விற்பனைக்கு தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் பெறுமதி 5 இலட்சம் ரூபாவிற்கும் அதிகம் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Advertisement

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் மொனராகலை பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர்.

அவர்களை மொனராகலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொனராகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.