5 கோடி ரூபா பெறுமதியான கைப்பேசிகளுடன் இருவர் கைது

சட்டவிரோதமாகக் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 1,083 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 200 பென்ரைவ்களுடன் இரண்டு வர்த்தகர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இன்று (17) காலை டுபாயில் இருந்து மேற்படி இருவரும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு 12 மற்றும் கொழும்பு 14 ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 59 மற்றும் 24 வயதுடைய இரண்டு வர்த்தகர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

சந்தேகநபர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களின் பெறுமதி சுமார் 5 கோடி ரூபா எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.