5 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் கேரள கஞ்சாவை கடத்திச் சென்ற ஒருவர் நேற்று (06) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

புளியங்குளம் பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமுக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி மோட்டார் சைக்கிளில், 5 கிலோ 124 கிராம் கேரள கஞ்சாவை கடத்தி சென்றுள்ளார்.

Advertisement

வவுனியா, செக்கடிப்புலவு பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் மற்றும் கேரள கஞ்சாவை வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் புளியங்குளம் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மற்றும் வவுனியா பொலிஸ் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.