Advertisement

4 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

அனுராதபுரத்தில் ருவன்வெலிசாய பஸ் தரிப்பிடத்துதக்கு முன்னால் 4 கிலோ 250 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக தயார் நிலையில் வைத்திருந்த சந்தேக நபரொருவர் பொலிஸ் அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்பிடிய பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய சந்தேகநபரே 8 இலட்சம் பெறுமதியான கஞ்சாவுடன் இவ்வாறு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபர் அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்

Advertisement