2024-இல் ஜனாதிபதி தேர்தலையும் பொதுத்தேர்தலையும் நடத்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு

இந்த வருடம் (2024) ஜனாதிபதி தேர்தலையும் பொதுத்தேர்தலையும் நடத்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்மரசிங்க தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இந்திய ஊடகமான WION-க்கு வழங்கிய நேர்காணலின் போது ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார் 

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்திய வௌிவிவகார அமைச்சர் S.ஜெய்சங்கர் இடையிலான சந்திப்பு அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெற்றுள்ளது.

Advertisement

நேற்று (09) இந்த கலந்துரையாடல் நடைபெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.