15 வயது சிறுமியை கடத்தி சென்று வன்புணர்ந்த இருவர் கைது

மட்டக்களப்பு – வெல்லாவெளி பிரதேசத்தில் 15 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த இருவரை கைது செய்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் 26 மற்றும் 21 வயதுடைய இளைஞர்கள் இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பிரதேசத்தைச் சோந்த 15 வயது சிறுமி கடந்த 7ம் திகதி தனது வீட்டில் இருந்து பாட்டி வீட்டிற்கு சென்று அங்கிருந்து தனிமையில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது காட்டுப்பகுதியை அண்டிய பகுதியில் வைத்து சிறுமியை இரு இளைஞர்கள் கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.

Advertisement

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து பொலிஸ் நிலையத்தில் நேற்று செய்த முறைப்பாட்டையடுத்து அந்த பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்களை கைது செய்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

கைது செய்தவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.