111 ஆமை முட்டைகளை வைத்திருந்த நபர் கைது

111 ஆமை முட்டைகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று (23) கைது செய்யப்பட்டுள்ளார்.

கொஸ்கொட பிரதேசத்தை சேர்ந்த 41 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் கொஸ்கொட பாலத்திற்கு அருகில் உள்ள கடற்கரை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.