Advertisement

1,000 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் – தலைமன்னார் பகுதியில் பாரியளவிலான போதை மாத்திரைகளை மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்ற நபர் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

விசேட அதிரடிப்படையின் யாழ்.முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நேற்று (03) தலைமன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுக்காரன் குதிரையிருப்பு சந்திக்கு அருகில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

அங்கு மோட்டார் சைக்கிளில் 1,000 போதை மாத்திரைகளை கடத்திச் சென்ற தலைமன்னார் பகுதியை சேர்ந்த 38 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டார்.

Advertisement

மேலதிக விசாரணைக்காக அவர் தலைமன்னாரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.