ஹஜ் பெருநாளுக்கான திகதி அறிவிப்பு

துல்ஹஜ் மாதத்திற்கான தலைபிறை இன்று (07) தென்பட்டதை அடுத்து, எதிர்வரும் 17ம் திகதி ஹஜ் பெருநாளை கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பெரியவாசல் அறிவித்துள்ளது.

இன்று மஃரிப் தொழுகையோடு, கொழும்பு பெரிய பள்ளிவாசலில் ஒன்று கூடிய பிறைக்குழு, கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாக சபை, ஏனைய முக்கியஸ்தர்களின் மாநாட்டில் துல்ஹஜ் மாதத்திற்கான தலைபிறையை உறுதிப்படுத்தி, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.