வெலிகமவில் பாடசாலையொன்றுக்கு அருகில் துப்பாக்கிச்சூடு

மாத்தறை, வெலிகம, படவல பத்தேகம ஆரம்ப பாடசாலைக்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இன்று (27) காலை பாடசாலைக்கு இரண்டு பிள்ளைகளை அழைத்துச் சென்ற நபரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கி பிரயோகத்தை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

Advertisement

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என வெலிகமவில் உள்ள எமது செய்தியாளர் தெரிவித்தார்.