வெப்பமான காலநிலை தொடர்பில் எச்சரிக்கை

நாட்டின் பல மாவட்டங்களில் வெப்பநிலை, எச்சரிக்கை மட்டத்தை விடவும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், கொழும்பு, கம்பஹா, ஹம்பாந்தோட்டை, குருநாகல், புத்தளம், அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் இவ்வாறு வெப்பநிலை அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement