வீடொன்றின் மீது வீழ்ந்த 5 கிலோ நிறையுடைய பனிக்கட்டி

பதுளை – ஹாலி-எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரெல்போல – மொரகல பகுதியில் வீடொன்றின் மீது பனிக்கட்டி ஒன்று வீழ்ந்துள்ளது.

சுமார் 5 கிலோகிராமுக்கும் அதிக நிறையுடைய பனிக் கட்டி ஒன்றே இவ்வாறு வீட்டின் மீது வீழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்றைய தினம் குறித்த பகுதியில் மழையுடனான வானிலை எதுவும் நிலவவில்லை என அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement

இந்த விடயம் தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ நிலையம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.