விளையாட்டு திடலில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் பலி

இந்தியாவின் குஜராத்தில் மாநிலத்தில் உள்ள கேளிக்கை அரங்கில் உள்ள விளையாட்டு திடலில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உயிரழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களுள் 12 சிறுவர்களும் உள்ளடங்கியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் நகரில் உள்ள கேளிக்கை அரங்கில் உள்ள விளையாட்டு திடலில் விடுமுறை நாளான நேற்று சிறுவர்கள் பெரியவர்கள் உள்ளிட்ட பலரும் கூடியிருந்தனர்.

Advertisement

இந்நிலையில், அந்த கேளிக்கை அரங்கில் நேற்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இதில் சிறுவர்கள்கள் உள்ளிட்ட 27 பேர் உயிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் வௌியிடப்பட்டுள்ளது.