விற்பனையில் சாதனை படைத்த கோட்டாவின் புத்தகம்

கோட்டாபய ராஜபக்ஷவின் ‘ஜனாதிபதி பதவியிலிருந்து என்னை வெளியேற்றிய சதி’ என்ற புத்தகம் நேற்று (07) வெளியிடப்பட்டு சில மணித்தியாலங்களில் முதல் அச்சு மிச்சமின்றி விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று காலை சந்தையில் வெளியான இந்த புத்தகம், மதியத்திற்குள் விற்று தீர்ந்ததாக விற்பனை முகவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலைமையின் அடிப்படையில் இதன் இரண்டாம் பதிப்பும் சந்தைக்கு வெளியிடப்பட்டு வருவதாகவும் மூன்றாம் பதிப்பிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement