விமானப்படை வீரர்களை 18,000 ஆக குறைக்க திட்டம்

விமானப்படையில் இணைக்கப்பட்டுள்ள 35,000 பேரை 18,000 ஆக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

விமானப்படை தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய விமானப்படைத் தளபதி இதனை தெரிவித்தார்.

அதற்கமைய, 2030ஆம் ஆண்டுக்குள் இந்த இலக்கை அடைய எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.

Advertisement