Advertisement

வாகன விபத்தில் 27 பேர் காயம்

இரத்தினபுரி – பலாங்கொடை பிரதான வீதியில் பெல்மடுல்ல, ரில்ஹேன பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பலத்த காயங்களுடன் மூவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது.

தனியார் பேருந்து ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

Advertisement

முச்சக்கர வண்டியில் பயணித்த மூவரும் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு பேருந்தில் பயணித்த சிலர் சிறு காயமடைந்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை பெல்மடுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.