வாகன இறக்குமதி தொடர்பில் இன்று வெளியான தகவல்

தற்போதைய அந்நியச் செலாவணி நெருக்கடியின் கீழ், இறக்குமதி கட்டுப்பாடுகள் மிகவும் திட்டமிடப்பட்ட மற்றும் நுட்பமான முறையில் தளர்த்தப்பட வேண்டும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இன்று தெரிவித்தார்.

எவ்வாறாயினும், சில காலத்திற்கு மோட்டார் வாகனங்கள் போன்றவற்றை இறக்குமதி செய்ய முடியாது என தாம் நம்புவதாக அமைச்சரவையின் பின்னரான ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.