வட்டு. இளைஞன் படுகொலை: மேலும் மூவர் கைது

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இளைஞனை கடத்தி படுகொலை செய்த குற்றச்சாட்டில் பிரதான சந்தேக நபர்களில் ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் ஏற்கனவே ஆறு பேரை கைது செய்துள்ளதுடன், அவர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு 28ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் இருவர் அடையாள அணிவகுப்பின் போது, கொல்லப்பட்ட இளைஞனின் மனைவியால் அடையாளம் காட்ட்டப்பட்டுள்ளனர்.

Advertisement

இந்நிலையில் தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வரும் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் வவுனியா , ஒட்டுசுட்டான் மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் தலைமறைவாகி இருந்த பிரதான நபர்களில் ஒருவர் உள்ளிட்ட மூவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ளவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார் அவர்களை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதேவேளை சந்தேக நபர்களுக்கு அடைக்கலம் கொடுத்த நபர்களுக்கு எதிராகவும் கடுமையான சட்ட நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுக்கவுள்ளனர்.