லண்டனில் வாள்வெட்டு தாக்குதல்: 14 வயது சிறுவன் பலி

வடகிழக்கு லண்டனில் வாள் ஏந்திய நபரால் நேற்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 14 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளார்.

இந்த தாக்குதலில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட 4 பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவத்தையடுத்து 36 வயதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மனரீதியில் பாதிக்கப்பட்டவர் என பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.