ரயில் பாதையில் பயணித்த இளைஞன் ரயில் மோதி உயிரிழப்பு

கைப்பேசியில் ஹேண்ட் ஃப்ரீயை போட்டுக்கொண்டு ரயில் பாதையில் பயணித்த இளைஞன் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக தெற்கு களுத்துறை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த மொஹமட் இமாத் என்ற 21 வயதுடைய இளைஞரே விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த இளைஞன் கட்டுகுருந்தவில் இருந்து களுத்துறை நோக்கி சென்றுள்ளதாகவும், அளுத்கமவில் இருந்து மருதானை நோக்கி பயணித்த ரயிலில் மோதி அவர் உயிரிழந்துள்ளதாகவும் ரயில்வே கட்டுப்பாட்டாளரின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

Advertisement

சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.