ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் காலமானார்

ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் எச்.எம்.கே.டபிள்யூ. பண்டார காலமானார்.

திடீர் சுகவீனம் காரணமாக அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் காலமானதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மாத்தளை விஞ்ஞானக் கல்லூரியின் பழைய மாணவரான இவர் பேராதனை மற்றும் மொரட்டுவை பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்று பொறியாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

Advertisement

ரயில்வே தலைமைப் பொறியாளர் (வீதிகள் மற்றும் தொழில்கள்) மற்றும் மேலதிக பொது முகாமையாளர் (உள்கட்டமைப்பு) உள்ளிட்ட பல உயர் பதவிகளையும் இவர் வகித்துள்ளார்.