ரணில் , மஹிந்த, பசில் ஆகியோர் இன்று சந்திப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (07) பிற்பகல் நடைபெறவுள்ளது.

இந்த சந்திப்பில் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் இரு கட்சிகளுக்கும் இடையிலான எதிர்கால அரசியல் விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் கட்சிக்குள் நிலவும் பிரச்சனைகள் மற்றும் எந்த தேர்தலை முதலில் நடத்துவது என்பது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement