யாழில் கடும் வெப்பத்தால் 5 பேர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் நிலவும் அதீத வெப்பம் மற்றும் வெப்ப அலை காரணமாக 05 பேர் உயிரிழந்துள்ளதாக யாழ்.போதான வைத்தியசாலையின் பொது மருத்துவ நிபுணர் ரி.பேரானந்தராஜா தெரிவித்துள்ளார்.

யால்.போதனா வைத்தியசாலையில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் தற்போது அதிக வெப்பமான காலநிலை காணப்படுகிறது.

Advertisement

ஒரு மனிதனின் உடலானது 40.5 சென்டிகிரேட் அல்லது 105 பரனைட் வெப்பத்தையே தாங்கும். அதனை தாண்டும் போது, தீவிரமான பாதிப்புகள் ஏற்படும்.

யாழ்.போதனாவில் சிகிச்சை பெற்று வந்த சுமார் 05 பேர் ‘ஹீட் ஸ்ரோக்’ காரணமாக உயிரிழந்துள்ளனர்.

அவர்களின் உயிரிழப்புக்கு அவர்களுக்கு ஏற்கனவே இருந்த நோய் நிலைமைகள் காரணமாக இருந்தாலும், அதிகரித்த வெப்ப நிலையே நோயினை தீவிரப்படுத்தி அவர்களின் உயிரிழப்புக்கு காரணமாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.