மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி

முல்லைத்தீவு, முள்ளியவளை நெடுங்கேணி வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (09) இடம்பெற்ற விபத்தில் முள்ளியவளை பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.

கணுக்கேணி பகுதியில்,பூண்டன்வயல் சந்தி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

Advertisement

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முள்ளியவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.