மீண்டும் ஆட்சியை பிடித்த மோடி

இந்திய மக்களவை தேர்தல் முடிவுகளின் அடிப்படையில்,பிரதமர் நரேந்திர மோடியின் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல்கள் ஆணையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 543 ஆசனங்களை கொண்ட இந்திய பாராளுமன்றில் 240 ஆசனங்களை இந்திய பாரதிய ஜனதா கட்சி வென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

பாரதிய ஜனதா கட்சியின் வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் பெரும்பான்மையான இடங்களில் முன்னிலையில் உள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளில் திராவிட முன்னேற்றக் கழகம் 11 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

அத்துடன் எஞ்சிய 29 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.