மின் கட்டணம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் கிடைக்கப்பெற்றதன் பின்னர் இம்மாத இறுதிக்குள் மின் கட்டணத்தை குறைக்க முடியும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

மேலும் மின்சாரக் கட்டணத் திருத்தத்திற்குத் தேவையான பரிந்துரைகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் மீண்டும் முன்வைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement