மின் கட்டணத்தில் ஜனவரி மாதம் நிவாரணத்தை எதிர்பார்க்க முடியாது..! வெளியான முக்கிய தகவல்

எதிர்வரும் பெப்ரவரி மாத நடுப்பகுதியில் மின்சாரக் கட்டணங்கள் திருத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

மின்சாரக் கட்டணத்தை திருத்தும்போது கடைப்பிடிக்க வேண்டிய நடவடிக்கை ஒன்று இருப்பதாகத் தெரிவித்த  அவர்,  

Advertisement

அதற்கிணங்க மக்கள் கருத்துக் கணிப்பு இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

இலங்கையில் உள்ள மின்சார பாவனையாளர்கள் ஜனவரி மாதம் மின்சார கட்டணத்தில் நிவாரணத்தை எதிர்பார்க்க முடியாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.