மின்சார வேலியில் சிக்கி ஒருவர் பலி

அனுராதபுரம், மஹாஇலுப்பள்ளம, புளியங்குளம் பகுதியில் பாதுகாப்பற்ற மின் கம்பியில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வன விலங்குகளிடமிருந்து பயிர் வயலைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பற்ற மின்சார வேலியில் சிக்கி இந்த நபர் உயிரிழந்துள்ளதாக இப்பலோகம பொலிஸார் தெரிவித்தனர்.

மஹாஇலுப்பள்ளம, இஹலகம பகுதியைச் சேர்ந்த மதுசங்க ரத்நாயக்க என்ற 34 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Advertisement

கறிவேப்பிலை அறுத்து விற்பனை செய்து வாழ்வாதாரத்தை கொண்டு செல்லும் இவர் இன்று (04) காலை புளியங்குளம் பகுதியிலுள்ள பழத்தோட்டம் ஒன்றிற்குள் பிரவேசித்து கறிவேப்பிலை பறித்து தோட்டத்திலிருந்து வெளியே வர முற்பட்ட வேளையில் இந்த சம்பவத்துக்கு முகங்கொடுத்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தோட்ட உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இப்பலோகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.