மின்சார மறுசீரமைப்பு திருத்த சட்டமூலம் வர்த்தமானியில் வௌியீடு

உத்தேச மின்சாரத்துறை மறுசீரமைப்பு, இலங்கை மின்சார சட்டமூலமாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தமானி நேற்று(17) வௌியிடப்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த சட்டமூலம் அடுத்த வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

Advertisement

கடந்த ஜனவரி மாதம் பங்குதாரர்களால் பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்களும் குறித்த திருத்த சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அமைச்சரின் X பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் தினத்திலிருந்து 2 வாரங்களுக்கு, அதன் சட்டபூர்வமான தன்மையை பொதுமக்கள் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.