Advertisement

மின்சார சபை ஊழியர்கள் போராட்டம்……



07.02.2024 தற்போது திருகோணாமலை மாவட்டத்தில் அமைந்திருக்கின்ற, இலங்கை மின்சார சபை பிரதான காரியாலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது.

நாட்டிலுள்ள அரச மற்றும் அரசு சார்பற்ற ஊழியர்களது ஊதியத்தை வரி என்ற பெயரில் அரசு சுரண்டும் வேலை திட்டத்திற்கு எதிராக ஏற்கனவே குரல் கொடுத்த நாடு பூராகவும் உள்ள இலங்கை மின்சார சபை ஊழியர்கள் 60 பேரை வேலை நிறுத்தம் செய்தமைக்காகவும், நாட்டிலுள்ள ஊழியர்களது சம்பளத்தை வரி என்ற பெயரில் சுரண்டும் வேலை திட்டத்தை நிறுத்த கோரியும் இப்ப போராட்டம் நடைபெற்று வருகின்றது.

இப்போராட்டமானது தங்களது காரியாலயங்கள் உள்ள வேலைகளுக்கு எவ்வித தடையும் இல்லாமல் தங்களுடைய இடைவேளை நேரத்தில் மாத்திரம் நடைபெறுகிறது என்பதை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Advertisement

(Naveeth najahi)