மின்சாரம் தாக்கி ஒருவர் மரணம்

வந்துரெஸ்ஸ பிரதேசத்தில் மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வந்துரெஸ்ஸ, கலயா பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் மீன் பிடிக்க ஏரிக்கு சென்றிருந்த நிலையில் வீடு திரும்பாததால் அவரை தேடிய போது ஏரியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Advertisement

ஏரிக்கு அருகில் விலங்குகளை வேட்டையாடுவதற்காக பொறுத்தபட்ட சட்டவிரோத மின் கேபிளில் இருந்து மின்சாரம் கசிந்ததால் அவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

மேலும் பிரேத பரிசோதனையில் மின்சாரம் தாக்கியதால் அவர் மரணித்தமை உறுதி செய்யப்பட்டது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாரியபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.