மாவனல்லையில் பாரிய தீ விபத்து – 30 கடைகள் எரிந்து நாசம்!

மாவனல்லை நகரின் பிரதான பஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்று (28) இரவு ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 30 கடைகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.

விரைந்து செயல்பட்ட பொலிஸார், மாவனல்லை பிரதேச சபையின் தீயணைப்பு பிரிவு மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

பழங்கள், ஜவுளி மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் பல கடைகள் இந்த தீயில் எரிந்து நாசமானது.

Advertisement

தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்பதுடன், மாவனெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.