மழையுடனான வானிலை தொடரும்

நாட்டின் பல பகுதிகளில் இன்று (21) 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அதற்கமைய, மேல், சப்ரகமுவ மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் மன்னார் மாவட்டங்களின் சில இடங்களிலும் மழை பெய்யக்கூடுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இலங்கையின் பல பகுதிகளில் வானம், மேக மூட்டத்துடன் காணப்படும்.

Advertisement

அத்துடன் இலங்கையைச் சூழவுள்ள ஏனைய கடற் பிராந்தியங்களிலும் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பான நிலை காணப்படும்.

இலங்கைக்கு மேலாக மணித்தியாலத்திற்கு சுமார் 40 ‐ 50 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

இந்தநிலையில் பலத்த காற்றும், மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.