மரதன் போட்டியில் பங்கேற்ற மாணவன் மரணம்

திருக்கோவில் பிரதேசத்தில் பாடசாலை ஒன்றின் இல்ல விளையாட்டு போட்டியில் பங்குபற்றிய மாணவர் ஒருவர் திடீரென சுகவீனமடைந்து உயிரிழந்துள்ளார்.

விளையாட்டு விழாவில் மரதன் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்ட இம்மாணவன் திடீரென சுகவீனமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருக்கோவில் 3 ம் பிரிவு துரையப்பா வீதியைச் சேர்ந்த 16 வயதுடைய ஜெயக்குமார் விதுர்ஜன் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Advertisement