போலி நாணயத்தாள்களுடன் சிக்கிய நபர்

போலி நாணயத்தாள்களுடன் நபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் யுக்திய நடவடிக்கை தொடர்பில் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் குழு நேற்று (15) வீரகெட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீகஸ்ஆர, மெதமுலன பிரதேசத்தில் போலி நாணயத்தாள்கள் புழக்கத்தில் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சுற்றிவளைப்பு ஒன்றை மேற்கொண்டனர்.

இதன்போது சட்டவிரோதமான முறையில் அச்சிடப்பட்ட 9 போலி 1,000 ரூபா நாணயத்தாள்களை வைத்திருந்த 32 வயதுடைய மெதமுலன பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

மேலதிக விசாரணைகளுக்காக வீரகெட்டிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.