போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பு – இரு பொலிஸ் அதிகாரிகள் கைது

போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பைப் பேணிய குற்றச்சாட்டில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படிஇ மாவத்தகமை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் தொரட்டியாவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவமே இவ்வாறு கைதாகியுள்ளனர்.

போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவர் வழங்கிய தகவலுக்கு அமைய குறித்த இருவரும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

கைதான 56 வயதுடைய பொலிஸ் உப பரிசோதகர் குருணாகல் பகுதியில் போதைப்பொருள் விநியோக செயற்பாடுகளில் ஈடுபடும் டுபாய் சம்பத் என்பவருடன் வட்ஸ்எப் ஊடாக உரையாடியுள்ளமை தெரியவந்துள்ளது.

அத்துடன் 38 வயதான பொலிஸ் உத்தியோகத்தர் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ஒருவருடன் தொடர்பை பேணியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கைதான இருவரையும் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர்.