பொலிஸாருடன் டீல் போட்ட கஞ்சிபானி இம்ரான்

ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள உலக குழுவின் தலைவரும் போதைப்பொருள் கடத்தல்காரனுமான கஞ்சிபானி இம்ரான் தற்போது மீண்டும் களத்தில் இறங்கியுள்ளார்.

யுக்திய நடவடிக்கை தொடர்பில் பேசுவதற்காக, கஞ்சிபனி இம்ரான் பொலிஸாருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அண்மையில் அவரது சகோதரர் யுக்திய நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டார்.

Advertisement

இந்த தொலைபேசி அழைப்பின் மூலம், கஞ்சிபானி இம்ரான் தனது குடும்ப உறுப்பினர்களை துன்புறுத்த வேண்டாம் என்று பொலிஸாரிடம் கேட்டுக்கொள்கிறார்.