பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி

மொரகஹஹேன டயர் தொழிற்சாலைக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

உத்தரவை மீறிச் சென்ற முச்சக்கர வண்டியின் மீது பொலிஸாரால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், இதன்போது முச்சக்கரவண்டிக்குள் இருந்த ஒருவர் தப்பியோடியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.