Advertisement

பேருந்து கவிழ்ந்து விபத்து: 28 மாணவர்கள் காயம்

மொனராகலை – கொடயான பகுதியில் இலங்கை போக்குவரதது சபைக்கு சொந்தமான பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 42 பேர் காயமடைந்துள்ளனர்.

புத்தமவில் இருந்து மொனராகலை நோக்கி பயணித்த பேருந்தொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக சியாம்பலாண்டுவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

இவர்களுள் 28 பாடசாலை மாணவர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.