பேருந்தின் சில்லில் சிக்கி பாடசாலை மாணவி மரணம்

கருவாத்தோட்டம் பகுதியில் தனியார் பேருந்தின் சில்லில் சிக்கி பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மல்கொல்ல படிதலாவ பகுதியைச் சேர்ந்த 10 வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இன்று (22) காலை புதிய கருவாத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடஹென்தென்ன பிரதேசத்தில் பேருந்தில் இருந்து இறங்கி குறித்த பேருந்துக்கு முன்னால் வீதியைக் கடக்கச் சென்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

Advertisement

விபத்தில் படுகாயமடைந்த மாணவி, புதிய கருவாத்தோட்டம் பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.