பெரிய வெங்காயத்தின் விலை குறைந்தது

பெரிய வெங்காயத்தின் விலை மீண்டும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் மொத்த விலை 140 ரூபாவாகும்.

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் மொத்த விலை 100-120 ரூபாவாகவும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ வெங்காயத்தின் மொத்த விலை 60 ரூபாவாகவும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement