பூசகரிடம் கொள்ளையடிக்கப்பட்ட நகை மீட்பு

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சாவகச்சேரி பூசகரிடம் கொள்ளையடிக்கப்பட்ட ஒன்றரை பவுண் தங்க நகை இன்றையதினம் மீட்கப்பட்டது.

சாவகச்சேரி பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், சங்கத்தானையை சேர்ந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் அவர் கொள்ளைக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்த கொள்ளை சம்பவம் குறித்து தொடர்புடையவர் என்ற ரீதியில் முல்லைத்தீவினை சேர்ந்த ஒருவருக்கு பொலிஸாரால் வலைவீசப்பட்டு வருகிறது.

அத்துடன்இ பூசகரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகையினை உருக்கியவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இருவரையும் சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவர்கள் இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.