புதிய பொலிஸ் மா அதிபரின் அதிரடி அறிவிப்பு

யுக்திய தேடுதல் நடவடிக்கை’ மிகவும் திறமையாகவும் வலுவாகவும் முன்னெடுக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

கண்டியில் தலதா மாளிகையில் இன்று (02) தரிசனம் செய்ததன் பின்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

குற்றவாளிகள், ஆட்கடத்தல்காரர்கள் மற்றும் பாதாள உலக குழுவினரை முழுமையாக ஒடுக்கி, அனைவரையும் மிகக் குறுகிய காலத்தில் கைது செய்ய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.