பிள்ளையின் காலணி வவுச்சரை விற்று கசிப்பு வாங்கிய தந்தை

திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் பிள்ளைக்கு கிடைத்த காலணி வவுச்சரை கடையில் கொடுத்து, அந்த பணத்தில் கசிப்பு குடித்த தந்தை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

வவுச்சர் வழங்கப்பட்ட போதிலும், காலணியின்றி பாடசாலைக்கு வரும் பல பிள்ளைகளை அழைத்து ஆசிரியர்கள் நடத்திய விசாரணையின் போது குறித்த பிள்ளை இதனைத் தெரிவித்துள்ளது.

பல பெற்றோர்கள் அந்த காலணி வவுச்சர்களை விற்று பணத்தை பெற்றுள்ளதாகவும், பிள்ளைகள் அவ்வப்போது பாடசாலைக்கு வராத காரணத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த உண்மை தெரியவந்ததாகவும் திஸ்ஸமஹாராம பிரதேச பாடசாலை அதிபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும் சட்டவிரோத மதுபானசாலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் பிரதேசவாசிகளையும் மாணவர்களையும் அவர்களிடமிருந்து பாதுகாப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.