பிரேம்ஜிக்கு திருமணம் – உறுதி செய்தார் வெங்கட் பிரபு

இசையமைப்பாளர் கங்கை அமரனின் இளைய மகனும் இயக்குநர் வெங்கட் பிரபுவின் தம்பியுமான பிரேம்ஜிக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக அண்மையில் செய்தி வெளியாகியிருந்தது.

இந்நிலையில், இந்த தகவலை அவரது சகோதரரான வெங்கட் பிரபு உறுதிப்படுத்தியுள்ளார்.

அந்த வகையில் வரும் ஜூன் 9ம் திகதி பிரேம்ஜியின் திருமணம் நடைபெறவுள்ளதாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement