பிக்கு வேடத்தில் பதுங்கியிருந்த பாதாள குழு உறுப்பினர்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் கும்பலைச் சேர்ந்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காலி – ஹல்மில்லேவ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் வசிக்கும் 43 வயதான பிக்கு ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

திட்டமிட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த 06 பேரும் மேலும் மூன்று சந்தேக நபர்களும் நேற்று (31) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

பலபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய ஒருவர், மினுவாங்கொட பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஒருவர், கம்பஹா-கொட்டுகொட பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய ஒருவர், இரத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவர் மற்றும் சபுகஸ்கந்த, ஹெய்யன்துடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவர் என பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த மேலும் மூன்று சந்தேக நபர்களும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.