பாலத்தில் இருந்து கவிழ்ந்த பேருந்து

ஹங்குரன்கெத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெல்தொட்ட நூல்கந்துர பகுதியில் இன்று (08) பேருந்து ஒன்று பாலத்தில் இருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ஹங்குரன்கெத்த பிரதேசத்தில் இருந்து தெல்தோட்டை நோக்கி ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்தொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதன்போது பேருந்தில் இருந்த சாரதி மற்றும் இரு பெண்களும் காயமடைந்து தெல்தோட்டை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

பேருந்து சாரதி கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்தி ஓட்டிச் சென்றதால் விபத்து ஏற்பட்டதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹங்குரன்கெத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.