பாடசாலை விடுமுறை தொடர்பான முக்கிய அறிவிப்பு

தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இரத்தினபுரி, கேகாலை, காலி, மாத்தறை, களுத்துறை மாவட்டங்கள் மற்றும் கொழும்பு மாவட்டத்தின் ஹோமாகம பிரதேசத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (04) நடைபெறாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், நாட்டின் ஏனைய மாவட்டங்கள் மற்றும் பிரதேசங்களில் நாளை (04) முதல் பாடசாலைகள் வழமை போன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.